உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் வைணவ திவ்யதேசங்களில் 44வதாக திகழ்கிறது. இங்கு பங்குனி பிரம்மோத்ஸவ விழா மார்ச் 12 முதல் 22 வரை நடக்கிறது. நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் (துவஜா ரோகணம்) கொடிப்பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் விஷேச திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டிப்பாராயணம் நடந்தது.

நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உள், வெளிப்பிரகார வீதியுலா நடக்கும். மார்ச் 16ல் இரட்டை கருட சேவையும், மார்ச் 18 ல் இரவு திருக்கல்யாண உற்ஸவமும், மார்ச் 21 (வியாழன்)  காலை 9:00 மணிக்கு மேல் 46 அடி உயரமுள்ள பெரிய தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டமும், மறுநாள் சேதுக்கரை கடலில் ஆதிஜெகநாதப்பெருமாளும், பட்டாபிஷேக ராமரும் உற்ஸவ மூர்த்திகளாய் எழுந்தருளி தீர்த்தவாரி விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !