சோழவந்தான் ராமநவமி உற்ஸவம்
ADDED :2510 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரம் கோபாலகிருஷ்ணன் கோயில் முன் நகர் ராமபக்த சபை சார்பில் ராமநவமி உற்ஸவம் ராமநாம பாராயணம் அர்ச்சனையுடன் நேற்று (மார்ச்.,13ல்) துவங்கியது.
ராமஜெனனம் குறித்து முரளிதரசர்மா சொற்பொழிவாற்றினார். மார்ச் 17 காலை சீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை சபா நிர்வாகிகள் செய்துள்ளனர்.