கிள்ளை அருகே பேச்சியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்
ADDED :2509 days ago
கிள்ளை: கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் பேச்சியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் பேச்சியம்மன் கோவில் பால்குட திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6 ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.நேற்று முன்தினம் (மார்ச்., 12ல்) பகல் 12.00 மணியில் இருந்து 1.30 மணிக்குள் காமாட்சி சந்தனவள்ளி மாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால்க்குட ஊர்வலம் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது.அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்குப் பின் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுபகுதியினர் பங்கேற்று சுவாமி தரினசம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.