ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேக விழா
ரெகுநாதபுரம்:ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் 15ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்ச மாதா, ஆஞ்சனேயர், சங்கரன் சங்கரி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அதிகாலை 4:30 மணியளவில் 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சபரிமலை தலைமை தந்தரி கண்டருவரு ராஜீவரு வாழ்த்துச்செய்தி அனுப்பி வைத்தார்.
அவருக்கு கோயிலின் சார்பில் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பெண்கள் நெய்விளக் கேற்றி வழிபாடு செய்தனர். பஜனை, ஐயப்பன் நாமாவளி, உலக நன்மைக்கான கூட்டு பிரார்த் தனை உள்ளிட்டவைகள் நடந்தது. பூஜைகளை கோயில் தலைமை குருசாமி மோகன் சாமி செய்தார். அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் சேவை நிலையஅறக்கட்டளையினர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.