மாலை வேளையில் தீபம் ஏற்றும் போது வெளிவாசல் பூட்டியிருக்கலாமா?
ADDED :4975 days ago
விளக்கேற்றும் வேளையில் வாசல் கதவைச் சாத்துவது, தூங்குவது, சாப்பிடுவது, பல் துலக்குவது, சவரம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது. நமது இல்லத்திற்கு மகாலட்சுமி வரும் நேரம் என்பதால் மங்களகரமான செயல்களையே செய்ய வேண்டும். இவ்வேளையில் சிறிது நேரமாவது, வாசல்பக்கம் கவனித்துக் கொண்டால் திருடர் பயம் இருக்காது. டிவி பார்க்க சவுகரியமாக இருக்கும் என்பதால், பலர் கதவைச் சாத்தி விடுகின்றனர். இதைத் தவிர்க்கலாம் இல்லையா!