உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

அன்னூர் சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

அன்னூர் : குன்னத்தூராம்பாளையம், சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், கரகம் எடுத்தல் நடந்தது.கடந்த, 5ம் தேதி வேள்வி வழிபாடு மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று, பக்தர்கள் அணிக்கூடை, தீர்த்தக்குடம், கரகம் எடுத்தனர். அம்மன் அழைப்பு நடந்தது.இன்று திருக்கல்யாண உற்சவம், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !