திருப்பூர் இருந்து பங்குனி உத்திரம் 60 சிறப்பு பஸ்கள்
ADDED :2436 days ago
திருப்பூர் : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து பழநிக்கு, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.பழநி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பங்குனி உத்திர தேர்த் திருவிழா நாளை நடக்கிறது. பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் பழநிக்கு செல்ல வசதியாக, திருப்பூரில் இருந்து, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கொடுவாய், தாராபுரம் வழியாக இந்த பஸ்கள் பழநி செல்லும். நேற்றிரவு (மார்ச்., 19ல்) துவங்கிய சிறப்பு பஸ் சேவை, நாளை (மார்ச்., 21ல்)மதியம் வரை இருக்கும், என, போக்குவரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.