மதுரை அண்ணாநகர் வெங்கடாஜலபதி கோயிலில் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம்
ADDED :2435 days ago
மதுரை அண்ணாநகர் ஆலமரம் பஸ்ஸ்டாப் அருகில் அமைந்துள்ள அருள்மிகு சேவுகப்பெருமாள், வெங்கடாஜலபதி கோயிலில் 21.3.19 பங்குனி உத்திரத்தை முன்னிட்டடு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் காலை 10 முதல் 12. 30 மணிக்குள் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 முதல் 6.30 மணிக்குள் நாமசங்கீர்த்தனமும் நடைபெறுகிறது. மாலை 6.30 முதல் 8.30 மணிக்குள் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.