விழுப்புரம் திருவாமாத்தூர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
ADDED :2506 days ago
விழுப்புரம்: திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் உற்சவம் நடந்தது.அதனையொட்டி நேற்று (மார்ச்., 20ல்) காலை 9:00 மணிக்கு திருவாமாத்தூர் ஏழுநிலை ராஜகோபுர கமிட்டி நிர்வாகி குபேரன் வடம் பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார். விழுப்புரம், நெய்வேலி கன்னிகாபரமேஸ்வரி ஸ்டோர் குணசேகரன், விழுப்புரம் வள்ளி விலாஸ் பாண்டுரங்கன், எஸ்.பி., ஜெயக்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.