உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி சுப்ரமணியர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

கோத்தகிரி சுப்ரமணியர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

கோத்தகிரி : ஊட்டி அருகே உள்ள அரசுக்கல் கம்பட்டி மாதேஸ்வர் திருவிழா மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.காலை, 5:00 மணிமுதல், 6:00 மணிவரை, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 8:00 மணிமுதல், 10:00 மணிவரை ஐயனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பகல், 12:00 மணிமுதல், 2:00 மணிவரை பஜனை, ஆடல் பாடல் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, காவடி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, இரவு, 9:00 மணிக்கு, அரசுக்கல் கம்பட்டி மாதேஸ்வரா பஜனை சங்கத்தினரின், அதிரூப அமராவதி என்ற சரித்த நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !