உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி பாலமுருகன் கோவில் தேர் திருவிழா

புதுச்சேரி பாலமுருகன் கோவில் தேர் திருவிழா

புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவிலில் இன்று (மார்ச்., 21ல்)நடைபெறும்
செடல் மற்றும் தேர் திருவிழாவையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மற்றும் கிழக்கு எஸ்.பி., முருகவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் அமைந் துள்ள பாலமுருகன் கோவிலில் இன்று (21ம் தேதி) நடைபெறவுள்ள செடல் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, இன்று (மார்ச்., 21ல்) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை செடல் திருவிழாவும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை தேர் திருவிழா நடைபெறுகிறது.

இதனால், புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக, சென்னை செல்லும் வாகனங்கள் இ.சி.ஆர்., பிள்ளைச்சாவடி சந்திப்பில் உள்ள பிள்ளையார் கோவில் வீதியில் மேற்கு பக்கமாக திருப்பி, பின் வடக்கு புறமாகவுள்ள மாத்தூர் ரோட்டில் சென்று பிம்ஸ் மருத்துவமனை ரோட்டில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்ல வேண்டும். அதே போல், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மேற்குபுறம் திரும்பி பிம்ஸ் மருத்துவமனை ரோடு வழியாக சென்று, பின், மாத்தூர் சாலை வழியாக பிள்ளைசாவடியை அடைந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும்.கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !