உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி நேற்று திருக்கல்யாணம் நடந்தது.இக்கோயில் விழா கடந்த மார்ச் 13 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் 9ம் நாளான நேற்று  காலை 5 :00 மணிக்கு செப்புதேருக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர்.  சிறப்பு பூஜைகள் முடிந்தபின்பு  காலை 7:35 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஆடிப்பூர மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார்  திருக்கல்யாணம் நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !