வடபழனி ஆண்டவர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2503 days ago
வடபழனி : பங்குனி உத்திர நாளான நேற்று, முருகன் மற்றும் சிவன் கோவில்களில், சிறப்பாக விழா எடுக்கப்பட்டது.
சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி ஆண்டவர் கோவிலில், நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். யாகசாலை முடித்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், பல்வேறு காவடி எடுத்து, அலகு குத்தி, பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். நேற்று இரவு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.