பெரியநாயக்கன்பாளையம் பிரமோற்சவத்தில் திருத்தேர்
ADDED :2502 days ago
பெ.நா.பாளையம்:பிரமோற்சவத்தையொட்டி, பெரியநாயக்கன் பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், இன்று (மார்ச்., 22ல்) மாலை திருத்தேர் விழா நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா, கடந்த, 16 முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (மார்ச்., 20ல்) மாலை, கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா இன்று (மார்ச்., 22ல்) மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. நாளை குதிரை வாகனம், பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.