வால்பாறை சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா
ADDED :2402 days ago
வால்பாறை : வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 67ம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் இரவு, அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஊர்வலத்தில், கேரள மாநில கலைஞர்கள் கடவுள் வேடமிட்டு பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.