அலங்காநல்லுார் முனியாண்டிசுவாமி கோயில் உற்ஸவம்
ADDED :2402 days ago
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் முனியாண்டிசுவாமி, முத்தாலம்மன் கோயில் பங்குனி உற்ஸவம் நடந்தது.விழாவில் முதல் நாள் அம்மனுக்கு சக்தி கிடா வெட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு வைத்து தரிசித்தனர்.2வது நாள் தீவட்டி பரிவாரங்களுடன் முனியாண்டி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலம் சென்று அருள் பாலித்தார். அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி பூஞ்சோலை சென்றார். 3வது நாள் விசஷே பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. 4 வது நாள் சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.