உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலூர் சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர விழா

வடலூர் சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர விழா

வடலூர்:குறிஞ்சிப்பாடி சிங்கபுரி (விழப்பள்ளம்) சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.உற்சவத்தை தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காமதேனு வாகனம், செம்மரிகிடா வாகனம், இந்திர விமானம், பல்லக்கு, குதிரை வாகனம், தெருவடைச்சான் என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.

சுவாமிக்கு திருக்கல்யாண கைலாச பர்வத உற்சவம் நடந்தது.நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து மாலை சுவாமி தீர்த்தவாரி நடைபெற்று, வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. சச்சிதானந்த அய்யர், முருகன் அய்யர், சரவணன் அய்யர், கணபதி அய்யர், குமரகுருநாதன் அய்யர், மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !