கடலூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம்
ADDED :2406 days ago
கடலூர்: புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.பங்கு உத்திர பெரு விழாவை முன்னிட்டு, புதுவண்டிப்பாளையத்திலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த 12ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிவசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த 17 ம் தேதி பாடலேசப்பெருமான் முன்னிலை யில் வள்ளி தெய்வானை திருமண விழா நடந்தது. 18ம் தேதி வாண வேடிக்கையுடன் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்வான தேரோட்டம் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் செங்குந்த மரபினர் செய்திருந்தனர்.