தேவபட்டினம் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2407 days ago
தேவபட்டினம்:தேவிபட்டினம் அருகே இலந்தைக்கூட்டம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முன்னதாக விரதமிருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் மற்றும் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து தீ மிதித்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.