குன்னூர் பங்குனி உத்திர விழா துவக்கம்
ADDED :2493 days ago
குன்னூர் : குன்னூர் அருகே மல்லிக்கொரை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி முருகனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. இதில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
மதியம் காவடி பெருவிழா, தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று (மார்ச்.,23ல்) காலை முதல் சிறப்பு அபிஷகம், அலங்காரம், மதியம், 1:00 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, அன்னதானம் நடக்கிறது. மற்றும் மாலை, 6:00 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.