உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேகம்

சேலம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேகம்

சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சவுந்தர விநாயகர் சன்னதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், தனி சன்னதியில், தும்பிக்கையாள்வார் எனும், சவுந்தர விநாயகர் உள்ளார். கோவில் கும்பாபிஷேக திருப்பணி, கடந்தாண்டு தொடங்கி, நடந்து வருகிறது. கடந்த நவம்பரில், திருப்பணி முழுமை பெற்ற, ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சன்னதிக்கு, முதலில் கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போது, சவுந்தர விநாயகர் சன்னதி திருப்பணி நிறைவடைந்து, கடந்த, 20ல், கணபதி யாகத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்), நான்கு கால யாகசாலை கலச பூஜை நடந்தது. தொடர்ந்து, திரளான பக்தர்கள், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால், விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று  (மார்ச்., 22ல்),காலை, விநாயகர் கோவில் கோபுர கலசத்துக்கு, பட்டாச்சாரியார்கள் புனிதநீருற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர் விநாயகர் சிலைகளுக்கு, புனிதநீரால் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !