சிதம்பரம் பாம்பன் சாமி மடாலயத்தில் பங்குனி உத்திர திருவிழா
ADDED :2393 days ago
சிதம்பரம்:சிதம்பரம் பாம்பன் சாமிகள் மடாலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.சிதம்பரம்-சீர்காழி சாலையில் அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் மடாலயத்தில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. அதிகாலை பஞ்சாமிர்த வண்ணப் பாராயணத்துடன் கருவறை, ஆறுபடை வீடு மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து காவடி அபிஷேகம், காவடி புறப்பாடு மற்றும் தீபாராதனை நடந்தது. 10:00 மணி முதல் 12:00 வரையில், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.மாலை, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சாமிகள் வீதியுலா புறப்பாடு தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.