நடுவீரப்பட்டில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :2470 days ago
நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம்,நடுவீரப்பட்டு பகுதியில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.
சி.என்.பாளையம் சொக்கநாதர்,மலையாண்டவர்,ஜோதி விநாயகர்,நடுவீரப்பட்டு கைலாசநாதர், செட்டிப்பிள்ளையார் ஆகிய கோவில்களில், பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று (மார்ச்., 25ல்) இரவு விநாயகர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.