புவனகிரி ராகவேந்திரா கோவிலில் சத்யநாராயண பூஜை
ADDED :2393 days ago
புவனகிரி:புவனகிரி ராகவேந்திரா கோவிலில் நடந்த சத்யநாராயண பூஜையில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புவனகிரி ராகவேந்திரா கோவிலில் பவுணர்மியை முன்னிட்டு ராகவேந்திரருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைநடந்தது. தொடர்ந்து, சத்யநாராயண பூஜையையொட்டி சுதர்சன ஹோமம், மகா தன்வந்தரி ஹோமம் நடந்தது.பூஜைகளை, ரகு ஆச்சாரியார், ரமேஷ் ஆச்சாரியார் செய்தனர். சுதர்சன ஹோமத்தில், ஏராளமானவர்கள் சுவாமிதரிசனம் செய்தனர்.