கோத்தகிரி சக்கத்தா மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
ADDED :2395 days ago
கோத்தகிரி : கோத்தகிரி சக்கத்தா மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.காலை, 9:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், கிராம கோவிலில் இருந்து, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள சக்கத்தா மாரியம்மன் கோவிலுக்கு பவனி வந்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் காணிக்கை செலுத்தி அம்மனை வழிப்பட்டனர்.
* கோத்தகிரி அழகு பண்ணாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, மாலை, 5:30 மணிக்கு, தேர் வீதி உலா நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த பண்ணாரியம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர், விழா குழுவினர் உட்பட, பொதுமக்கள் செய்திருந்தனர்.