கொட்டாம்பட்டி காரைகுத்தம்மன் கோயில் திருவிழா
ADDED :2711 days ago
கொட்டாம்பட்டி: அலங்கம்பட்டி காரைகுத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மாறுவேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொட்டாம்பட்டி, வீரசூடாமணிபட்டி நெவுலிநாத அய்யனார் கோயில் மற்றும் ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திருவிழா நேற்று (மார்ச்., 28ல்) நடந்தது. மாவிளக்கு ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அய்யனார் கோயிலில் துவங்கிய ஊர்வலம் செல்லி அம்மன் கோயிலை அடைந்தது. மதியம் மஞ்சுவிரட்டு நடந்தது.