பழநியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :2456 days ago
பழநி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில் உள்ள
பைரவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்டப் பொருட்களால் அபிஷேகம் செய்தனர்.
வெள்ளிக்கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இதேபோல பெரியநாயகியம்மன், பெரியாவுடையார் உள்ளிட்ட கோயில்களில் பைரவருக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. பூசணி, தேங்காய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.