வெள்ளகோவில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :2391 days ago
வெள்ளகோவில்:வெள்ளகோவில் ஸ்ரீ சோழீஸ்வரர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள காலபைரவருக்கு நேற்று (மார்ச்., 28ல்)மாலை தேய்பிறை அஷ்டமி காலபைரவர் யாக சிறப்பு வழிபாடு நடந்தது.
உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும், சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.பூஜையை முன்னிட்டு காலபைரவருக்கு சந்தனாதி தைலம், அரிசி மாவு, திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், கரும்புச்சாறு, விபூதி,சந்தனம், பன்னீர், சொர்ணா பிஷேகம், கலச அபிஷேகம் உட்பட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
அதன்பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டு குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.