திருப்பூர் கோவில் திருவிழாவில் பட்டுவாடா? பறக்கும் படையினர் கண்காணிப்பு
ADDED :2392 days ago
திருப்பூர்:கோவில் திருவிழாக்களை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.லோக்சபா தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி
கொண்டு செல்லப்படும் பணம் மட்டுமின்றி, மற்றவையும் கண்காணித்து வருகின்றனர்.
வழக்கமாக பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் கிராமம், நகர பகுதியில் உள்ள அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறும். இதில், அரசியல் கட்சி பிரமுகர்கள் அன்பளிப்பு என்ற பெயரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்க வாய்ப்புள்ளதாக கூறி, திருவிழாக்களை கண்காணிக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், சட்டசபை தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படையினர் கண்காணித்து வருகின்றனர்.