மாட்டுப்பெண் வந்தாச்சு
ADDED :2778 days ago
’மாடு’ என்பது செல்வத்தைக் குறிக்கும். மருமகளை ’மாட்டுப்பெண்’ என்று சொல்வர். இவளின் வரவால் வீட்டில் செல்வம் பெருகும் என்னும் பொருளில் ’மாட்டுப்பெண்’ என அழைப்பர். பெற்ற மகளுக்கு மாற்றாக குடும்பத்திற்கு வந்தவள் என்பதால் மருமகளை ’மாற்றுப்பெண்’ என்று சொல்வர். மகளுக்கு பதிலாக வந்ததால் ’மறுமகள்’ ஆனாள். அதுவே திரிந்து மருமகளாகி விட்டது.