எப்போதும் ஜூனியர் தான்!
’சீனியர் சிட்டிசன்’ என அடிக்கடி சொல்ல விரும்புகிறார்கள் பெரியவர்கள். இந்த நிலை மாற வேண்டும். வயதான காலத்தில் அலுவலகப்பணி வேண்டுமானால் இல்லாமல் போகலாம். ஆனால் கடவுள் சிந்தனைக்கு ஓய்வு கிடையாது.
ஜான்வெஸ்லி என்பவர் தன் வாழ்நாளில் 4 லட்சம் கி.மீ., தூரத்தை குதிரையில் பயணம் செய்து, ஆன்மிக சொற்பொழிவு செய்து வந்தார். நாள் ஒன்றுக்கு 32 கி.மீ.,க்கு குறையாமல் செல்வார். 40 ஆண்டு கால பயணத்திற்கு இடையில் 400 புத்தகங்களையும் எழுதினார். 4000 ஆன்மிகக் கூட்டங்களை நடத்தினார். 10 மொழிகள் பேசும் திறமை பெற்ற அவர் 83 வயது வரை வாழ்ந்தார்.
வாழ்வின் இறுதிக் காலத்தில் கூட தினமும் 15 மணி நேரம் உழைத்தார். அதிகாலை 5:00 மணிக்கே எழுந்து வேலைகளை தொடங்குவார். இவரை உங்களைப் போன்ற இளைஞர்கள் உதாரணமாக கொள்ள வேண்டும்.
உண்மை, நேர்மை, சுறுசுறுப்பு மிக்கவர்களே கடவுளுக்கு விருப்பமானவர்கள். எப்போதும் நாம் ஜூனியர் சிட்டிசனாகவே இருப்போம்.