உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்

பிரசாதம் இது பிரமாதம்

மங்களூரு ரவா லாடு

தேவையான பொருட்கள்

சன்ன ரவை         100 கி
கடலை மாவு         100 கி
சர்க்கரை         100 கி
தேங்காய்         தேவையான அளவு
முந்திரிப்பருப்பு        8
நெய்         200 கி
கிஸ்மிஸ்         10
ஏலப்பொடி         சிறிதளவு
உப்புத்தூள்         சிறிதளவு

செய்முறை: ரவை, கடலை மாவை தனித்தனியாக சலித்துக் கொள்ளவும். கிஸ்மிஸ், முந்திரியை துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை சன்னமாக துருவிக் கொள்ளவும். வாணலியில்  சிறிது நெய் விட்டு சூடானதும்  கிஸ்மிஸ், முந்திரியை தனித்தனியாக வறுத்து வைக்கவும். பிறகு வாணலியில் பாதி நெய்யை விட்டு சூடானதும் ரவை சேர்த்து வாசனை வரும் பக்குவத்தில் வறுக்கவும். மீதி நெய்யை சூடாக்கி கடலை மாவையும் வறுக்கவும். இன்னொரு வாணலியில் சர்க்கரையை தேவையான  தண்ணீர் விட்டு கம்பிப்பாகு பக்குவம் வரும் வரை சூடாக்கவும்.  இதற்கிடையில், கடலைமாவு, ரவை, முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், உப்புத்தூள், ஏலப்பொடியை ஒன்றாக்கி கலவையாக்கவும். சர்க்கரைப்பாகில் கலவையை, கட்டிபடாமல் கிளறியபடி சேர்க்கவும். சூடு ஆறும் முன் சிறு உருண்டைகளாக உருட்ட, சுவையான மங்களூரு ரவா லாடு தயாராகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !