உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்
மஹாத்மாநஸ்து மாம் பார்த
தைவீம் ப்ரக்ருதி மாஸ்ரிதா:!
பஜந்த்ய நந்ய மந ஸோ
ஜ்ஞாத்வா பூதாதி மவ்யயம்!!
ஸததம் கீர்தயந்தோ மாம்
யதந்தஸ்ச த்ருடவ்ரதா!
நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா
நித்யயுக்தா உபாஸதே!!

பொருள்: என்னை நிலையானவன் என்றும், அழியாதவன் என்றும் அறிந்த நல்லவர்கள், தெய்வீக இயல்பு கொண்டவர்கள், பெரியவர்கள் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் முழுமனதுடன் பக்தியில் ஈடுபடுகிறார்கள். மன உறுதி கொண்ட இவர்கள் எப்போதும் என்னுடைய திருநாமங்களையும், குணங்களையும் பாடி இசைத்துக் கொண்டும், என்னை அடையும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மனதில் என்னை தியானித்தபடி பக்தியில் நிலைத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !