உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் வருஷாபிஷேக விழா

முதுகுளத்தூர் வருஷாபிஷேக விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் உள்ள சாத்தார் உடையார் அய்யனார் மற்றும் சித்தர் பொன்னங்கோடாங்கி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

காலையில் கிராம தேவதை பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அய்யனார் கோயில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தது.பின்னர் நடைபெற்ற பொது அன்னதானத்தில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிச்சை கோடாங்கி, வேலாம்மாள், வள்ளிமயில் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !