அவலூர்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2451 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை புதுப்பூண்டி தாங்கல், சுயம்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 31ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று (ஏப்ரல்., 1ல்) காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.