உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை வரதர் கோவிலில் 14ல் லட்சார்ச்சனை

ஊத்துக்கோட்டை வரதர் கோவிலில் 14ல் லட்சார்ச்சனை

ஊத்துக்கோட்டை: சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது.

ஊத்துக்கோட்டை சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களில், தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி நடைபெறும் லட்சார்ச்சனை விழா சிறப்பு வாய்ந்தது. இந்தாண்டு, 14ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, லட்சார்ச்சனை விழா துவங்குகிறது.

மறுநாள், 14ம் தேதி, காலை, 7:30 மணிக்கு, மீண்டும் துவங்கி, மாலை, 5:30 மணி வரை நடைபெற உள்ளது. மாலை, 6:00 மணிக்கு, சுந்தர வரதராஜர் சேவா பஜனைக் குழுவினரின், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !