உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் 13ல் கொடியேற்றம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் 13ல் கொடியேற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா, வரும், 13ல், கொடியேற்றத் துடன் துவங்குகிறது.

காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவம், வரும், 13ல் காலை, 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முதல் நாள் சப்பரத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெறும். முக்கிய உற்சவமான அதிகார நந்தி சேவை, 17ல் காலையிலும் அன்று இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.வரும், 19ல் தேர் திருவிழாவும், 22ல் காலையில் நடராஜர் தரிசனம், அன்று இரவு வெள்ளி ரதம் உற்சவம் நடைபெறுகிறது. 27ம் தேதி இரவு, ஊஞ்சல் உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !