உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

விழுப்புரம்:விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழுப்புரத்தில் பழமைவாய்ந்த, பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமி, அம்மன் மற்றும் நந்திக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் நேற்று 2 ல், மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. நந்தி வாகனத்தில் சுவாமி-அம்மன் பிரகார வலம் வந்தனர். பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !