திருவள்ளூரில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாடு
திருவள்ளூர் : திருவள்ளூரில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ் வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு, நேற்று (ஏப்., 2ல்) மாலை நடந்தது.இதில், நந்தி பகவானுக்கு, பால், இளநீர், தயிர், தேன், விபூதி உள்ளிட்ட பலவகையான அபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, தீபாராதனை நடந்தது.
திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து, சிவ - பெருமான் ரிஷப வாகனத்தில் உட்பிரகாரம் வலம் வந்தார்.பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில் எழுந்தருளி உள்ள புஷ்பவனேஸ்வர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.இதில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.