உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் (ஏப்., 2ல்) பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 5:45 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

உற்சவர் சோமாஸ்கந்தர் உள்புறப்பாடு நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பண்ருட்டி சோமநாதசுவாமி கோவில், திருவதிகை குணபரேஸ்வரர் கோவில், புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவில், செம்மேடு காசிவிஸ்வநாதர் கோவில், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !