உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை வீர காமாட்சியம்மனுக்கு திருக்கல்யாண விழா

உடுமலை வீர காமாட்சியம்மனுக்கு திருக்கல்யாண விழா

உடுமலை : உடுமலை அருகே புதுப்பாளையத்தில், பழமை வாய்ந்த வீரகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. கோவிலில், மார்ச் 23ல், அம்மன் திருக்கல்யாண திருவிழாவுக்கான நோன்பு சாட்டப்பட்டது. கடந்த 2ம் தேதி ஊர்க்கிணறு வளாகத்தில் இருந்து சக்தி கும்பம் வைத்து வழிபாடு செய்து, அம்மனை கும்பத்தில் எழுந்தருளச்செய்து, கோவிலுக்கு அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று (ஏப்., 3ல்) காலை, 5:00 மணிக்கு மேல், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, அம்மன் திருவீதியுலா, கிராம முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. அப்போது, பெண்கள் அம்மனுக்கு, சீர்வரிசை எடுத்து வந்தனர்.

மாலை, 6:00 மணிக்கு, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர். இன்று (ஏப்., 4ல்), மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், 6:00 மணிக்கு அபிஷேக பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !