சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழா
ADDED :2560 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கருட உருவம் பொறித்த கொடியை பக்தர்கள் சுமந்து ரத வீதிகள் சுற்றி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். ரகுராம பட்டர் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.
இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். விழா ஏற்பாடுகளை தக்கார் சக்கரையம் மாள், நிர்வாக அதிகாரி சுசிலராணி, அலுவலர்கள் பூபதி, வசந்த் செய்தனர்.