உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடம் செல்லியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

பெண்ணாடம் செல்லியம்மனுக்கு சிறப்பு வழிபாடு

பெண்ணாடம்:அமாவாசையை முன்னிட்டு, பெண்ணாடம், முக்குளம் பிடாரி செல்லியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் (ஏப்., 4ல்) காலை 9:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணியளவில் பால், சந்தனம், தயிர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !