நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஜீவசமாதியில் சிறப்பு பூஜை
ADDED :2417 days ago
நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் ஜீவ சமாதியடைந்த சித்தருக்கு அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தது.சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ் வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தவர் சித்தர் பரங்கிப்பேட்டையார் என்கிற குழந்தைவேல் சுவாமிகள்.இவர் அக்கோவிலில் உள்ள பிரணவ தீர்த்தத்தில் முக்தியடைந்து ஜல சமாதி அடைந்தார்.
இவருக்கு மலையின் தென்மேற்கு பகுதியில் ஜீவசமாதி அமைக்கப்பட்டது. அவரது நினைவாக ஜீவசமாதியில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று முன்தினம் (ஏப்., 4ல்) அமாவாசையை முன்னிட்டு மதியம் 1:00 மணிக்கு ஜீவ சாமதியடைந்த இடத்தின் மேல் உள்ள பலிபீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.