பங்குனி கார்த்திகை: பழநியில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED :2342 days ago
பழநி: பங்குனி மாதக் கார்த்திகையை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது.பக்தர்கள் பால்குடங்கள் மற்றும் காவடிகள் எடுத்து ஆட்ட பாட்டத்துடன் வெளிப்பிரகாரத்தை வலம் வந்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். ரோப்கார், வின்ச் ஸ்டஷேனில் குவிந்த பக்தர்கள் ஒரு மணிநேரம் வரை காத்திருந்து மலைக்கு சென்றனர். அங்கு பொதுதரிசன வழியில் மூலவரை தரிசனம் செய்ய இரண்டு மணிநேரம் காத்திருந்தனர். 108 திருவிளக்கு பூஜை, தங்கமயில் புறப்பாடு, தங்கரதப் புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில்களில் கார்த்திகை சுவாமி புறப்புபாடு சிறப்பு பூஜையில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.