உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் சித்திரை திருவிழாவிற்கு 27 உண்டியல்

அழகர்கோவில் சித்திரை திருவிழாவிற்கு 27 உண்டியல்

அலங்காநல்லுார்:அழகர்கோவில் சித்திரை திருவிழா ஏப்., 15ல் துவங்குகிறது. ஏப்.,17 மாலை தங்கபல்லக்கில் மதுரையை நோக்கி கள்ளழகர் புறப்படுகிறார்.


ஏப்., 18 அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். 19ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் பெருமாள் வைகைஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் அதிகாலை 5:45 மணிக்கு மேல் 6:15 மணிக்குள் இறங்குகிறார். இதையொட்டி அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை 445 மண்டபங்களில் எழுந்தருளுவார். லட்சக்கணக்காண பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக போலீஸ் பாதுகாப்புடன் 27 உண்டியல் பெட்டிகள் சுவாமி செல்லும் வழியாகவே சென்று கோவிலை வந்தடையும். இதற்காக கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அவை தயார்நிலையில் உள்ளன. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாகஅதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !