உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் அருகே சென்னகுணம் கோவிலில் மகாகும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம் அருகே சென்னகுணம் கோவிலில் மகாகும்பாபிஷேகம்

விழுப்புரம்:கண்டாச்சிபுரம் அருகே சென்னகுணம் கிராமத்தில் உள்ள பாலவிநாயகர், திரவு பதியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை (10ம் தேதி)நடக்கிறது.

இன்று (ஏப்., 9ல்) காலை 7.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. கோ பூஜை, கணபதி, அஷ்டலஷ்மி, நவக்கிரக மகா சாந்தி ஹோமம், முதல் கால பூஜை நடக்கிறது. நாளை  (ஏப்., 10ல்) காலை 4:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, விஸ்வரூப தரிசனம், துவார பூஜை, வேதிக பூஜை நடத்தி, 108 மூலிகை மூல மந்திர ஜபம் வாசித்து, தீபாராதனை நடக்கிறது. 6:45 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீரூற்றி, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு சர்வ அலங்காரத்தில் சுவாமி திருவீதியுலா உற்சவம் நடக்கிறது.

வரும் 11ம் தேதி, மண்டலாபிஷேகம் துவங்குகிறது.இக்கோவிலில் அம்மனை வழிபட்டு பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !