சிறுவாலையில் பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜை
ADDED :2534 days ago
கண்டாச்சிபுரம்:சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜை நடந்தது.
கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், திங்கட்கிழமை தோறும் சோமவார பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்., 8ல்) காலை 11.00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாம பூஜை, அதனைத்தொடர்ந்து உச்சிகால பூஜை நடந்தது.
வாழைப்பூ கலச வழிபாடு, மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு நன்னீர் தீர்த்தப் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், சிவாச்சாரியார் கோபி ஆகியோர் செய்தனர்.