சென்னை ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா
ADDED :2407 days ago
சென்னை: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில், ராம நவமி விழா, யாக சாலை பூஜையுடன் நேற்று (ஏப்., 10ல்) துவங்கியது.
நங்கநல்லூரில் அமைந்துள்ளது, 32 அடி உயர அதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும், ராம நவமி விழா விமரிசையாக கொண்டாடப்படும்
இந்த ஆண்டு, ராம நவமி விழா கொண்டாட்டம், நேற்று (ஏப்., 10ல்) யாக சாலை பூஜையுடன் துவங்கியது. நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு, ராம நவமி தினமான, 13ம் தேதி, மகா பூர்ணாஹுதி, கலசாபிஷேகம் நடக்கிறது.
அன்று சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, லட்சார்ச்சனை நடக்கிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், சிறப்பு நிகழ்வாக, 1,008 பூச்சொரிதலும் நடத்தப்படுகிறது.