ஸ்ரீமுஷ்ணம் தேர் கட்டும் பணி வர்த்தக சங்க நிர்வாகிகள் பார்வை
ADDED :2399 days ago
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில், சித்திரை திருவிழா நேற்று (ஏப்., 12ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 17ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது.
ஆண்டுதோறும் தேர் திருவிழாவை ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தக நல சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். தற்போது தேர் கட்டும் பணி நடந்து வருவதை வர்த்த நல சங்க மண்டல தலைவர் சண்முகம், மாநில துணைத்தலைவர் பழமலை, மாவட்ட செயலர் வீரப்பன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் ஆகியோர்
பார்வையிட்டனர்.பின்னர் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர் திருவிழாவிற்கு அடுத்த நாள் தேர்தல் நடைபெற உள்ளதால், விழாவை விரைவாக முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட துணை தலைவர் ரவி, நகர தலைவர் சிவானந்தம், நகர செயலர் பன்னீர் செல்வம், இளைஞரணி பூவராகமூர்த்திஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.